பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் #GobackModi என்ற ஹேஸ்டேக் இந்தியா அளவிலும் சிலவேளை உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் வந்த நிலையில் இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகையும் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

பிரதமர் மோடி தமிழகம் வரும்போது ஒவ்வொரு முறையும் வரவேற்பதும், எதிர்ப்பு தெரிவித்தும் டிரெண்ட் செய்யப்பட்டது. அவ்வப்போது பா.ஜ., ஆதரவளாளர்கள் #TNwelcomesModi என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்ய முயற்சி செய்தனர். 

இந்நிலையில் தற்போது காங்., தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்துள்ளார். அவருக்கும் காங்., எதிர்பாளர்கள், மற்றும் பா.ஜ., ஆதரவாளர்கள் #gobackpappu, #gobackpappu ஆகிய ஹேஷ் டேக்களை டிரெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்திய அளவில் #VanakkamRahulGandhi என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் #gobackpappu ஹேஷ்டேக் மூன்றாம் இடத்தில் உள்ளது.  சென்னை ட்ரெண்டிங்கில்  #VanakkamRahulGandhi மூன்றாம் இடத்தில் உள்ளது. 

இது மட்டும்மல்ல தமிழகம் வரும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை, டில்லி, கொல்கத்தா, ஐதராபாத், உள்ளிட்ட நகரங்களிலும் #gobackrahul  #VanakkamRahulGandhi ஆகிய ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.