அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான, பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஆரிய வைத்திய மருத்துவமனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது வழக்கமான உடல் பரிசோதனைக்காவவும், உடல் சோர்வை நீக்கும் வகையில், ஆரிய வைத்தியசாலையில், ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொன்னாலும் ராமநாதபுரம் பகுதியில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இன்று  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓபிஎஸ், அடுத்த 2 நாட்களுக்கு, புத்துணர்வு சிகிச்சைகள் பெற உள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.