Asianet News TamilAsianet News Tamil

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம்.. கையை விரித்தார் தமிழக ஆளுநர்..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

Only the President has the power to release 7 people including Perarivalan .. Governor of Tamil Nadu stretches out his hand ..!
Author
Chennai, First Published Feb 4, 2021, 9:48 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விடுதலை செய்யும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநரிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

 Only the President has the power to release 7 people including Perarivalan .. Governor of Tamil Nadu stretches out his hand ..!
இதற்கிடையே 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், “7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் விடுதலையில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவெடுப்பார் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்று தமிழக ஆளுநர், அந்தத் தீர்மானத்தை நிராகரித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios