காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவரது உழைப்பு என்பது போற்றுதலுக்குரியது. காங்கிரசில் கடைசியாக பேர் இருந்தாலும் கூட நான் காங்கிரஸில் தான் இருப்பேன் என்றவர் தான் சேகர் ரெட்டியார். கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் பின்னர் கட்சியை விட்டு வெளியேறினர். 

முதுகில் அழுக்கு உள்ளவன்தான் மோடிக்கு பயப்படுவான் என புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மூன்று மந்திரக்கோல்களை மோடி கையில் வைத்து ஆட்டி படைக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபகாலமாக பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல முக்கிய திரை பிரபலங்களும், பல்வேறு துறையில் சாதித்தவர்களும் கூட மோடிக்கு ஆதரவாக எழுதியும் பேசியும் வருகின்றனர். இந்நிலையில் நாராயணசாமி இவ்வாறு விமர்சித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் அவர் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கூடப்பாக்கம் சேகர் ரெட்டியார் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று பத்து கண்ணு பகுதியில் அனுசரிக்கப்பட்டது, அதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். அதில் நாராயணசாமி பேசுகையில், மறைந்த சேகர் ரெட்டியார் காங்கிரஸ் மீதும் சோனியா காந்தி மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவர் காட்டிய பிரியத்தின் காரணமாக அவருக்கு பல்வேறு பதவிகளை வழங்கி காங்கிரஸ் கட்சி அழகு பார்த்தது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக அவரது உழைப்பு என்பது போற்றுதலுக்குரியது. காங்கிரசில் கடைசியாக பேர் இருந்தாலும் கூட நான் காங்கிரஸில் தான் இருப்பேன் என்றவர் தான் சேகர் ரெட்டியார். கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் பின்னர் கட்சியை விட்டு வெளியேறினர். அப்படி சென்றவர்கள் எல்லாம் இப்போது நடுத்தெருவில் இருக்கிறார்கள். பலரும் இப்போது மோடியை புகழ்ந்து பேசி வருகின்றனர். அதாவது மோடி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய மூன்று மந்திரங்களை வைத்துள்ளார். அதற்காக பயந்துதான் பலர் அவரை ஆதரித்து பேசுகின்றனர்.

முதுகில் அழுக்கு உள்ளவன்தான் மோடிக்கும் பயப்படுவார்கள். என நாராயணசாமி ஆவேசமாக பேசினார். முழுக்க முழுக்க புதுச்சேரியில் ஒரு பொம்மை ஆட்சி நடைபெறுகிறது. புதுச்சேரியை ஆர் ரங்கசாமி ஆளவில்லை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தான் ஆட்சி செய்கிறார். தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும், மாநில அரசின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்துள்ள நிலையிலும் இதுவரையிலும் பாஜக புதுச்சேருக்கு எதுவுமே செய்யவில்லை. இவ்வாறு நாராயணசாமி பேசினார்.