Asianet News TamilAsianet News Tamil

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்... ரஜினி முடிவை மனதார வரவேற்ற ஓபிஎஸ்..!

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல்நிலை நன்றாக இருந்தால்தான் சிறப்பாக பணியாற்றமுடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவு பற்றி தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.
 

Only if there is a wall can the picture be drawn ... OBS to welcome Rajini's decision heartily ..!
Author
Theni, First Published Dec 29, 2020, 9:59 PM IST

கால் நூற்றாண்டாக அரசியல் கட்சி தொடங்குவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31 அன்று கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடங்குவதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.Only if there is a wall can the picture be drawn ... OBS to welcome Rajini's decision heartily ..!
ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர் செல்வம், “ரஜினி கட்சி தொடங்க இருப்பதாக தெரிந்தவுடன் வாழ்த்து தெரிவித்தேன். ஜனநாயகத்தில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. தற்போது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அவர் எடுத்த முடிவுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல்நிலை நன்றாக இருந்தால்தான் சிறப்பாக பணியாற்றமுடியும்” என்று ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios