ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் மிரட்டத்தொடங்கி விட்டதாக பலரும் கவலை கொள்கின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி செந்தில் குமார் பகிரங்கமாக மிரட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் தரக்குறைவாக உங்காத்தா எனப்பேசியிருந்தார் திமுக எம்.பியும், துணை கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா. இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் அலைக்கற்றை திருடனே அடக்குடா உன் நாவை என்கிற தலைப்பில் ’இனியும் உன் நாக்கு எல்லை தாண்டுமானால் ஆண்டிமுத்து மகனே இனி உனக்கு அத்தியாயங்கள் ஆரம்பமாகும்.  ஜாக்கிரதை’’என ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவுக்கு நமது அம்மா நாளிதழில் குத்தீட்டி படுபயங்கர எச்சரிக்கை விடுத்து இருந்தார்.  

மேலும் அந்தக் கட்டுரையில், ‘’அடம், மானம்கெட்ட ராசா... உன்னைப் போலவும், உன் தலைவனைப் போலவும் பிறரது கால் கழுவி பிழைத்தவர்கள் இந்திய அரசியலிலேயே கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று முப்பாத்தம்மன் கோயில் சுண்டலை விநியோகம் செய்வது போல தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடைய அலைக்கற்றை வைரத்தை நிலக்கரி விலைக்கு விற்று ஒன்றே முக்கால் லட்சம் ரூபாய் கோடியை கொள்ளையடித்தவன் நீ. நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தையே பாகிஸ்தான் தொடர்புடைய பால்வாக்களுக்கும், சீனாவுக்கு ஆயுத கொள்முதல் செய்து கொடுக்கும் டெலிநார் எனப்படும் டெலி நார்வே என்னும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் இந்தியாவின் அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு விற்று பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து கையும், களவுமாக மாட்டிக் கொண்ட களவாணி பய நீ’’ என விமர்சனங்களை முன் வைத்து இருந்தார்.

இந்தக் கட்டுரையை எழுதிய நமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார். அவரது பக்கத்தை சுட்டிக்காட்டி  பெருசா ஒன்னும் இல்ல, ஒரு ஐந்தே ஐந்து பௌர்ணமி மட்டும் தான் அதற்கு பின் அம்மா-வாசைகளுக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மிக சிறப்பாக செய்துவிடலாம்’’ எனப்பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்து வரும் சிலர் , ‘’எந்த திமுக, காங்கிரஸ்காரர்களாவது நாங்கள் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது பண்ணுவோம் என சொல்கிறார்களா? 5 மாதத்தில் ஆட்சிக்கு வந்து DGP யை பாத்துக்கறோம், அண்ணாமலைக்கு இருக்கு, வெட்டுறோம், தூக்குறோம் என்றுதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

ஆட்சியில் இல்லாமல் வெறி கொண்டு இருக்கிறார்கள்’’ என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பொது வெளியில் உங்களுக்கு பிடிக்காதவர்களையும், விமர்சிப்பவர்களையும் மிரட்ட தொடங்கி விட்டீர்கள் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலைமை அதோ கதி தான், இதில் நாடளுமன்ற உறுப்பினர் வேறு’’ என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.