only by bjp rule the framer problem will solved
ராமநாதபுரம் மாவட்டம் கூரியூர் பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இங்கு, சுரங்கப்பாதை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ரயில்வே நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை பணிகளை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
‘நாடு முழுவதும் ரயில் பாதைகளில் உள்ள ஆள் இல்லா ரயில்வே கேட்டுகளை உருவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இது, மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்று.
ஆனாலும், கூரியூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படுவதால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதுபற்றி ரயில்வே துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில், தீர்வு காணத் தொடர்ந்து முயற்சிப்போம்.
இன்று மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வேலை வெட்டி இல்லாதவர்கள், வேலையே இல்லாதவர்களுக்காக அறிவித்துள்ளார்கள்.
நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக, கேரள மாநிலங்கள் அணை கட்டுவதற்கு நமது ஆறுகளான காவேரி, தாமிரபரணி, வைகையில் இருந்து மணல் அனுப்பும் வேலையை செய்தவர்கள் தி.மு.கவினர். அவர்களே இன்று, விவசாயிகளுக்கு போராடுகிறோம் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.
விவசாயிகளுக்காக போராட, தி.மு.கவுக்கு எந்த அருகதையும் கிடையாது. அவர்கள் பிழைப்புக்காகவும் தமிழகத்தில் செல்வாக்கை இழந்துவரும் தி.மு.கவை பிழைக்கவைக்கவே இந்த போராட்டத்தை அறிவித்து, இன்று நடத்தி வருகின்றனர்.
பிழைப்புக்காகப் போராடும் தி.மு.கவின் தந்திரத்துக்கு சில அமைப்புகளும் இறையாகி உள்ளன. 41 நாட்களாக டெல்லியில் போராடிய அய்யாக்கண்ணு உள்ளிட்டவர்களை பலமுறை சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்காதவர்கள், தி.மு.க சொன்னதும் போராட்டத்தை கைவிட்டு டெல்லியில் இருந்து சென்றுவிட்டனர்.
உண்மையில், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த அனுப்பியவர்கள், திரும்பி வருமாறு அழைத்தவுடன் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார் அய்யாக்கண்ணு.
பாஜக தலைமையிலான அரசு தமிழத்தில் அமைந்த பின்னரே, விவசாயிகளின் வேதனை தீரும். அது விரைவில் நடக்கும்’‘ என்றார்.
