ஒரே நாடு ஒரே தேர்தல்... அப்போ எதிர்ப்பு! இப்போ ஆதரவு! அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி .!

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. 

One Nation One Election ... AIADMK support tvk

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளார். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. 

இதையும் படிங்க;- எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.. ஓபிஎஸ்-ஐ முந்திய இபிஎஸ்..!

One Nation One Election ... AIADMK support tvk

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும். அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நேரத்தையும்,பெரும் செலவையும் குறைக்கும். 

One Nation One Election ... AIADMK support tvk

மத்திய, மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு கொள்கைகளை திறம்பட செயல்படுத்த இடைவிடாத ஆட்சி காலத்தை வழங்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை சிறந்த வாக்குப்பதிவிற்கும், ஜனநாயக பங்கேற்பிற்கும் வழிவகுக்கும். தேர்தல் வெற்றிக்காக இடையில் அறிவிக்கப்படும் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே ஆட்சியின் முக்கிய குறிக்கோளாக இருக்கும். முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையிலான  குழு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக, வலுவான  மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என நம்பிக்கை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த எடப்பாடி..! என்ன காரணம் தெரியுமா.?

One Nation One Election ... AIADMK support tvk

2018ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அப்போது தேசிய சட்ட ஆணையம் இது தொடர்பான கருத்தை கேட்ட போது, மாநில அரசின் ஆட்சிக்காலம் குறைக்கப்படும். எனவே ஆதரவு இல்லை என்று எழுத்து மூலமாக கூறியிருந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையில் அதிமுக திடீர் பல்டி அடித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios