Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாடு… ஒரே ரேஷன் கார்டு திட்டம் ! அடுத்த ஆண்டு முதல் செயலுக்கு வருகிறது !!

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பொது வினியோகத்துறை அமைச்சர்  ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

one nation and one ration plan will be implement
Author
delhi, First Published Aug 10, 2019, 7:11 AM IST

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

one nation and one ration plan will be implement

இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர்  ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

one nation and one ration plan will be implement

இதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மகாராஷ்ட்ரா  மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

அடுத்ததாக அரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகமாகி இருக்கிறது. தற்போது இந்த மாநில மக்கள் தங்கள் மாநிலத்துக்குள் எந்த பகுதியிலும் பொருட்கள் வாங்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

one nation and one ration plan will be implement

இதைத்தொடர்ந்து 11 மாநிலங்களும் தங்களுக்குள்ளே எந்த மாநிலத்திலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரிக்குள் அமலில் வரும் என மத்திய உணவுத்துறை செயலாளர் ரவி காந்த் தெரிவித்தார்.

one nation and one ration plan will be implement

ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மகாராஷ்ட்ரா  மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தபின் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் பேசும்போது இன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். தலா 2 மாநிலங்களுக்கு இடையேயான ரேஷன் கார்டு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios