One Man Army Rahul Gandhi - Kushboo comment on Twitter
குஜராத்தில் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு ராகுல்காந்தி பல பா.ஜ.க தலைவர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிவதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9 மற்றும் 14 ஆம் தேதிகள் என இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் தற்போது வரை 102 இடங்களில் பாஜகவும், 77 இடங்களில் காங்கிரசும் முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தில் பாஜகவுக்கு பெரும் போட்டியை காங்கிரஸ் கொடுத்து வருகிறது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை காங்கிரசிடம் தடுமாறிய
நிலையிலேயே உள்ளது. அதேபோல் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, குஜராத்தில் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு, பல பாஜக தலைவர்களின் தூக்கத்தை ராகுல் காந்தி கெடுத்துள்ளார் என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிகிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி
தலைமையிலான காங்கிரசுக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரசின் முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் பிரச்சாரத்துக்கு வராத நிலை இருந்தது. ஆனால், ராகுல் காந்தி, மட்டுமே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அவரின் தேர்தல் யுக்திகள் காங்கிரசுக்கு இந்த முறை குஜராத்தில் கைகொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
