Once the OPS team announced that the teams will be connected only if the announcement is announced
சசிகலா நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அணிகள் இணைப்பு நடைபெறும் என ஒபிஎஸ் அணி தெரிவித்துள்ளதால் மீண்டும் இணைப்பில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
நீண்ட அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இண்டையும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் பரபரப்பில் உள்ளனர்.
இதைதொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஒபிஎஸ் அணி வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். இதையடுத்து இரு அணிகள் இணைப்பு குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், பலதரப்பு பேச்சுவார்த்தைக்கு நடுவே இரு தரப்பும் இணையும் என்ற கட்டம் அரங்கேறியது. இதற்காக நேற்று முந்தினம் மெரினா கடற்கரையில் உள்ள ஜெ சமாதி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
ஆனால் பதவி பங்கீடில் ஒபிஎஸ் அணிகளுக்குள்ளே குழப்பம் நிலவியதால் இணைப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளும் இன்று இணையும் என தகவல் வெளியாகியது. ஆனால் ஒபிஎஸ் தரப்பு தொடர்ந்து பூச்சாண்டி காட்டி வருகிறது. காரணம் சசிகலா நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அணிகள் இணைப்பு நடைபெறும் என ஒபிஎஸ் அணி தெரிவித்துள்ளது.
சசிகலா தொடர்பாக முடிவு எடுப்பதில் எடப்பாடி அணி காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
