வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என 43% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என 43% பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலமாக இந்த விவரம் தெரியவந்துள்ளது. தொடக்கத்தில் காங்கிரசுக்கு அதிக ஆதரவு காணப்பட்ட மாதிரியான ஒரு தோற்றம் இருந்தாலும், ஒரு மாத கால இடைவெளியில் நிலவரம் தலைகீழாக மாறி வருகின்றது, அதற்கு முக்கிய காரணமாக மூன்று விஷயங்கள் சொல்லப்படுகிறது.

குறிப்பாக பாலக்கோடு தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதல். அதாவது தீவிரவாதிகள் அரங்கேற்றிய புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தும் அற்புத திட்டம், மற்ற எந்த பிரிவினரையும் பாதிக்காமல் அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்கியது... இப்படி பல முக்கிய திட்டங்கள் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருக காரணமாக அமைந்துள்ளன.

இது குறித்த கருத்துக்கணிப்பு படி,
மீண்டும் மோடியை பிரதமராக 43 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்தும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என 24 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மாயாவதி மம்தா பானர்ஜி மற்றும் மற்ற தலைவர்கள் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
