படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் முறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய விவாதம் நடைபெற்ற பின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய வரி விதிக்கும் முறையை தாக்கல் செய்தார்.

 

அதன்படி 1974ம் ஆண்டு போக்குவரத்து வரி விதிப்பு சட்டப்படி படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் முதன் முறையாக ஆம்னி பேருந்து இருக்கைக்கு வரி விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் ஒரு இருக்கைக்கு மாதம் 2500 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.

இந்த புதிய வரி விதிப்பால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயரும் நிலை உருவாகி உள்ளது. இதுவரை இருக்கைகளுக்கு என தனியாக வரி விதித்ததே இல்லை. 1974ம் ஆண்டு போக்குவரத்து விதிப்படி ஒரு பேருந்தில் ஆயிரம் ரூபாய் ஒரு படுக்கைக்கும் அமரும் இருக்கைக்கு ஆண்டுக்கு 1000 ரூபாயும் வரி விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை காரணமின்றி ஏற்றி வந்த அதன் உரிமையாளர்கள் இந்த புதிய வரி விதிப்பால் கடுமையாக கட்டணத்தை உயர்த்தக் கூடும் எனக் கருதப்படுகிறது. இந்த வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.