Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே... அடுத்த 4 நாட்களுக்கும் அடித்து ஊற்றப்போகுதாம்... 23 மாவட்டங்களுக்கு பயங்கர எச்சரிக்கை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  வங்க கடல் பகுதிகள் 17.11.2021,18.11.2021: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Oh my God ... will be beating and pouring for the next 4 days ... Terrible warning for 23 districts.
Author
Chennai, First Published Nov 17, 2021, 12:25 PM IST

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 17.11.2021 திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கள்ளக்குறிச்சி மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

மேலும் 18.11.2021: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Oh my God ... will be beating and pouring for the next 4 days ... Terrible warning for 23 districts.

19.11.2021, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20.11.2021:, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் 21.11.2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருமூர்த்தி (திருப்பூர்) 13, மங்களபுரம் (நாமக்கல்) 11, கங்கவல்லி (சேலம்) 8, காட்பாடி (வேலூர்), ஹரூர் (தருமபுரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), பந்தலூர் (நீலகிரி) தலா 7,  செட்டிகுளம் (பெரம்பலூர்), செங்கம் (திருவண்ணாமலை), திருப்புவனம் (சிவகங்கை), மேட்டூர் (சேலம்) தலா 6, கமுதி (ராமநாதபுரம்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), மாரண்டஹள்ளி (தருமபுரி), அரிமளம் (புதுக்கோட்டை), திருப்பத்தூர், பாலக்கோடு (தருமபுரி), கெத்தண்டபட்டி (திருப்பத்தூர்) தலா 5, ஊத்துக்குளி (திருப்பூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), டேனிஷ்பேட்டை (சேலம்), தேவாலா (நீலகிரி), ஆத்தூர் (சேலம்), லால்பேட்டை (கடலூர்) தலா 4,

Oh my God ... will be beating and pouring for the next 4 days ... Terrible warning for 23 districts.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 17.11.2021,18.11.2021: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 19.11.2021: தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios