Asianet News TamilAsianet News Tamil

அடக்கடவுளே.. தமிழகத்தில் மீண்டும் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

17.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

 

Oh my God .. rain again in Tamil Nadu .. Meteorological Center warning.
Author
Chennai, First Published Feb 16, 2022, 12:12 PM IST

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 16.02.2022:  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. 

17.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.18.02.2022:தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

Oh my God .. rain again in Tamil Nadu .. Meteorological Center warning.

19.02.2022, 20.02.2022 : தென் தமிழக  மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும்.

Oh my God .. rain again in Tamil Nadu .. Meteorological Center warning. 

அதிகபட்ச வெப்பநிலை 30  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22  டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கும்.  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):சிவலோகம் (கன்னியாகுமரி) 5,சுருளக்கோடு (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி) தலா 2, சிற்றாறு  (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios