Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே.. கொரோனா 4வது அலை ஜூன் 22 முதல் தொடங்கும், ஆகஸ்டில் உச்சம் அடையும்.. ஐஐடி கான்பூர் அதிர்ச்சி.

நான்காவது அலையின் தீவிரம் கொரோனாவின் புதிய மாறுபாடு மற்றும் நாட்டின் தடுப்பூசியின் நிலையை பொறுத்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐஐடி கான்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நாட்டில் மூன்றாவது முறையாக கொரோனாவை கணித்துள்ளனர். மூன்றாவது அலை குறித்த அவர்களது கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்துள்ளது. 

Oh my God .. Corona 4th wave will start from June 22 and will reach its peak in August .. IIT Kanpur shock.
Author
Chennai, First Published Mar 2, 2022, 12:47 PM IST

நாட்டில் ஓமைக்ரான் கொரோனா மூன்றாவது அலை ஓய்ந்துள்ள நிலையில் 4வது அலை இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும், பின்னர் அது ஆகஸ்டில் உச்சம் அடையும் என்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. நாட்டில் ஒமைக்ரான் மூன்றாவது அலை ஓய்ந்து அமைதி திரும்பியுள்ள நிலையில்,  மீண்டும் அது எப்போது தோன்றும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொரோனா குறித்து இரண்டு முறை துல்லியமான கணிப்பை வெளியிட்டுள்ள கான்பூர் ஐஐடி நான்காவது வருகை குறித்தும் அதற்கான தேதி குறித்தும் தகவலை வெளியிட்டுள்ளது.ஜூன் 22ஆம் தேதி முதல் நாட்டில் 4வது அலை தொடங்கும் பின்னர் ஆகஸ்ட் 23-க்கு அது உச்சத்தை அடைந்து, பின்னர் அக்டோபர் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

medrxiv வில் வெளியிடப்பட்ட ஆய்வு:  இந்த ஆய்வை ஐஐடி கான்பூர் பேராசிரியர் ஷலப், இணைப் பேராசிரியர் சுப்ரா சங்கர் தார்,  மற்றும் அவர்களின் மாணவர்கள் மற்றும் புள்ளியியல் துறை இணைந்து கூட்டாக நடத்திய  ஆய்வாகும். ஆய்வுக் கட்டுரை பிப்ரவரி 24 அன்று ஹெல்த் சயின்சில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 936 நாட்களுக்கு பிறகு நான்காவது அலை தொடங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 30-2020 அன்று நாட்டில் முதல் கொரோனா தோற்று உருவானது. இந்த ஆய்வின்படி நான்காவது அலை 2022 ஜூன் 22 முதல் தொடங்கி அக்டோபர் 24 வரை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது அலையின் உச்சம் ஆகஸ்ட் 15 முதல் 31 வரை இருக்கும். ஆகஸ்ட் 23 அன்று அதிகபட்ச தொற்று ஏற்படும், அதன்பிறகு வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும், அதேபோல் புதிய மாறுபாடு வைரஸ்களே அதன் தீவிரத்தை தீர்மானிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oh my God .. Corona 4th wave will start from June 22 and will reach its peak in August .. IIT Kanpur shock.

நான்காவது அலையின் தீவிரம் கொரோனாவின் புதிய மாறுபாடு மற்றும் நாட்டின் தடுப்பூசியின் நிலையை பொறுத்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐஐடி கான்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் நாட்டில் மூன்றாவது முறையாக கொரோனாவை கணித்துள்ளனர். மூன்றாவது அலை குறித்த அவர்களது கணிப்பு கிட்டத்தட்ட சரியாக இருந்துள்ளது. அதேபோல் இந்த ஆய்வும் முழுக்க முழுக்க கணித மாதிரியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. நான்காவது அலையை கணித்துள்ள ஐஐடி கான்பூரில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் " பூட்ஸ்ட்ராப் "  மற்றும் காசியன் வினியோகம் போன்ற புள்ளிவிபர முறைகளில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். நான்காவது அலையின் உச்ச நேர புள்ளிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை இடைவெளியை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். நம்பிக்கை இடைவெளி என்பது ஒரு மாதிரி முறையில், நிச்சயமற்ற தன்மை அல்லது உறுதியின் அளவை அளவிட புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.

இந்த முறையை பயன்படுத்தி நான்காவது அலை மட்டுமல்லாது மற்ற நாடுகளில் வரும் அலைகளையும் கணிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தியா உட்பட பல நாடுகளில் மூன்றாவது அலையை இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதேசமயம் நான்காவது அலை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஜிம்பாப்வேயில் இருந்து தரவுகளைப் பயன்படுத்தி நாட்டில் மூன்றாவது அலையை கணிக்க முயன்றுள்ளனர். இதற்கும் ஆராய்ச்சியாளர்கள் ஜிம்பாப்வேயிலிருந்து தரவுகளை பெற்றுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தொடங்கப்பட்ட கொரோனா மாறுபாடு இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் மூன்றாவது அலைக்கு காரணமாக அமைந்தது.

Oh my God .. Corona 4th wave will start from June 22 and will reach its peak in August .. IIT Kanpur shock.

இந்நிலையில்தான் நான்காவது அலையை ஆய்வு செய்துள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் ஷலாப், இந்த ஆய்வு ஒரு யூகம் ஆனால் ஒரு அறிவியல் ஆய்வு, ஜிம்பாப்வே போன்ற ஒரு நாட்டில் இருந்து தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. அங்கு 4வது அலை வந்துள்ளது. இதனடிப்படையில் இந்தியாவுக்கான புள்ளிவிவர மாதிரிகளை உருவாக்கி நான்காவது அலை வந்தால் அது எவ்வளவு காலத்தில் வரலாம் என்று மதிப்பீடு செய்துள்ளோம். இதேபோல தொற்று நோய்யியல் நிபுணர் டாக்டர் சந்திரகாந்த் லகாரிய கூறுகையில், நான்காவது அலை தொடர்பான ஆய்வு யூகத்தில்  அடிப்படையிலானது மற்றும் அறிவியல் அடிப்படையிலானது என்றாலும் விவரம் தெளிவாக இல்லை, எனவே நான்காவது அலையை இப்போது கணிப்பது கடினம் என கூறியுள்ளார். கான்பூர் ஐஐடி பேராசிரியர் மணிந்தர் அகர்வால் நான்காவது அலையைப் பற்றிய ஆய்வு ஜிம்பாப்வேயில் இருந்து தரவுகளின் அடிப்படையில் யூகங்களை அடிப்படையாகக் கொண்டது. இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்று சொல்வது கடினம்.  இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். 

இதேபோல நான்காவது அலையில் எத்தனை பேர் பாதிக்கப்படுவர், இறப்பு எவ்வளவு ஏற்படும் என்பதை இப்போதைக்கு சொல்வது கடினம் என்றும் கூறியுள்ளார்.  நான்காவது அலையில் எந்த மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும் என்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது. இது வைரஸின் பிறழ்வை பொறுத்தது. ஆனால் கிரேக்க எழுத்துக்களின் படி கொரோனாவின் அடுத்த பிறழ்வின் பெயர்  பை என குறிப்பிடப்படும். பூஸ்டர் டோஸ் தேவைப்படுமா? என்பது டாக்டர் லஹாரியா கூறுகையில், "காலப்போக்கில் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்தாலும், செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி முடிவடையவில்லை. இதுவே மனிதர்களை கொரோனா மாறுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது. பூஸ்டர் டோஸ் பற்றி இன்னும் ஆய்வு தேவை. 60+ பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் தேவை என்றார். பேராசிரியர் மனிந்திரா கூறுகையில், "பூஸ்டர் டோஸ் குறித்து ஆய்வு இன்னும் நடந்து வருகிறது, அதன் முடிவுகளுக்குப் பிறகுதான் அதன் பயன்பாடு குறித்து முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios