வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் இந்திய அளவில் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக ஏ.சி.சண்முகமும், திமுக சார்பாக பொருளாளர் துரைமுருகனின் மகனும் போட்டியிட்டனர். இந்நிலையில் அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
  
அதன்படி ஜூலை 11 மனு தாக்கல் செய்யப்படும்,  ஜூலை18 வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் ஜூலை 22. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் ஆகஸ்ட் 9 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.