ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் வரும் நாடாளுமன்றத்  தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திற்குட்பட்ட சவுத்வார் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை  ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என  மத்திய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் வாக்குறுதி அளித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இவற்றால் மாநிலத்தில் உள்ள சுமார் 3.26  கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஒடிசா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன