தன் தம்பியை கட்சியில் அதிரடியாக நீக்கி பின் சேர்த்தாலும் அதற்காக வட்டியும் முதலுமாய் வசூலிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் ஓ.பன்னீர் பன்னீர்செல்வம். ஓ.ராஜவுக்கு மத்திய அமைச்சருக்கு இணையான பொறுப்பை பெற்றுத்தர முயற்சித்து வருகிறார்.

கடந்த 19ம் தேதி கட்சியிலிருந்து நீகப்பட்டார் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான அன்புத் தம்பி ஓ.ராஜா. அடுத்த ஐந்தாவது நாளில் என்ன மாயம், மந்திரம் நடந்ததோ அதிரடியாக கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கும், மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்குமான காரணங்கள் வண்டி, வண்டியாய் குவிந்து வருகின்றன. ஆனால், டெல்லி தரப்பின் அழுத்தம் காரணமாகவே ஓ.ராஜா மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஓ.ராஜா கட்சியில் உடனடியாக நீக்கப்பட்டதும், சேர்க்கப்பட்டதும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.  

ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் ஓ.பி.எஸ் தரப்புக்கு கவலையில்லை என்பதை உணர்த்தும் வகையில் மீண்டும் ஒரு அதிரடிக்கு தயாராகி வருகிறார் அவர். தன் தம்பியை கட்சியில் அதிரடியாக நீக்கி பின் சேர்த்தாலும், அதற்காக வட்டியும் முதலுமாய் வசூலிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. அந்த பதவிக்கு தன் தம்பி ஓ.ராஜாவை நியமிக்கக்கோரி டெல்லி பாஜக மேலிடம் மூலமாகவே அடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறாராம் ஓ.பி.எஸ். கேபினட் அந்தஸ்து கொண்ட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிக்கு தலைமைச் செயலகத்தில் முக்கிய கோப்புகளையும் பார்க்கும் அதிகாரம் உண்டு. அதனால்தான் அந்த பதவிக்கு தன் தம்பியைக் கொண்டுவருவதற்கு தீவிரமாகக் களமிறங்கி இருக்கிறாராம் ஓ.பி.எஸ். ஆக மொத்தத்தில் அடுத்த அதிர்ச்சிக்கு தயாராகி வருகிறார்கள் தமிழக மக்கள்.