அதிமுகவை தன் வசமாக்கிக்கொள்வதே டி.டி.வி.தினகரனின் நோக்கம். அவர் கிங் மேக்கராக நினைத்துக் கொண்டு இருக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை தன் வசமாக்கிக்கொள்வதே டி.டி.வி.தினகரனின் நோக்கம். அவர் கிங் மேக்கராக நினைத்துக் கொண்டு இருக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எங்கு பிரச்சாரத்துக்குச் சென்றாலும் ஓ.பன்னீர்செல்வத்தை மிஸ்டர் தர்மயுத்தம் என்று பட்டப்பெயர் வைத்தே அழைக்கிறார் டி.டி.வி.தினகரன். அதுவும் டி.டி.வி.தினகரன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஓபிஎஸை மிஸ்டர் தர்மயுத்தம் என்று அழைக்கும்போது மட்டும் கூட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். 
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் குறித்து ஓ.பி.எஸ் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ’’ ஜெயலலிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. வாழ்நாள் முழுவதும் அந்த இழப்பு எங்களுக்கு இருக்கும். அதே நேரத்தில் அம்மா கொண்டு வந்த திட்டங்களை முன் வைத்து நாங்கள் மக்களிடத்தில் ஓட்டு கேட்டு வருகிறோம். எங்களுக்கு மக்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள்’’ எனக் கூறினார். 
“ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை வென்ற பிறகு, அதிமுக-விலிருந்து பிரிந்து சென்ற தினகரன், அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து, தற்போது தமிழக அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். இந்த முறை நடக்கும் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது அமமுக. தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் கிங்-மேக்கர் ஆக வருவாரா?” என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், ’’அதிமுக-வை தன் வசமாக்கிக் கொள்வதுதான் தினகரனின் ஒரே நோக்கம். ஒரு குடும்பத்தின் பிடியில் மொத்த கட்சியையும் கொண்டு வர அவர் விரும்புகிறார். தான் ஒரு பெரும் சக்தி என்று அவர் நினைத்துக் கொள்கிறார். மக்கள் அவரை நிராகரித்து விட்டனர்” எனத் தெரிவித்தார்.
