Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain: அய்யய்யோ... 18 ஆம் தேதி நடக்கப் போகுது பயங்கரம்.. மீண்டும் சென்னைக்கு அலர்ட்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 16.11.2021: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

O God .. it's going to be terrible on the 18th .. Alert to Chennai again.
Author
Chennai, First Published Nov 16, 2021, 1:42 PM IST

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக

16.11.2021 கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 17.11.2021: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

O God .. it's going to be terrible on the 18th .. Alert to Chennai again.

18.11.2021, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

19.11.2021: அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் 20.11.2021 திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.  

O God .. it's going to be terrible on the 18th .. Alert to Chennai again.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மதுக்கூர் (தஞ்சாவூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 10, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), லக்கூர் (கடலூர்) தலா 7, கிராண்ட் அணை (தஞ்சாவூர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 6, சிவகங்கை, கல்லிக்குடி (மதுரை), கிருஷ்ணகிரி, தென்பரநாடு (திருச்சி), புதுக்கோட்டை, வீரகனூர் (சேலம்), திருப்புவனம் (சிவகங்கை), சிற்றார் (கன்னியாகுமரி), லால்குடி திருச்சி , திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மணம்பூண்டி (விழுப்புரம்),, சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 5, மருங்காபுரி (திருச்சி), ஆலங்குடி (புதுக்கோட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மலையூர் (புதுக்கோட்டை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திருவையாறு (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி)  திருச்சிராப்பள்ளி, வெட்டிக்காடு (தஞ்சாவூர்) தலா 4, வேப்பூர் (கடலூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), திண்டுக்கல் (திண்டுக்கல்), காரைக்குடி (சிவகங்கை), திருமானூர் (அரியலூர்), துறையூர் (திருச்சி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சேலம், சுருளக்கோடு (கன்னியாகுமரி), ஓமலூர் (சேலம்), சமயபுரம் (திருச்சி), தொழுதூர் (கடலூர்), பாலவிடுதி (கரூர்), பழனி (திண்டுக்கல்), அரிமளம் (புதுக்கோட்டை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தலா 3,

O God .. it's going to be terrible on the 18th .. Alert to Chennai again.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 16.11.2021: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 17.11.2021, 18.11.2021: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.அரபிக்கடல் பகுதிகள் 16.11.2021: மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios