‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொண்டுவருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும்’ என்று சீமான் கண்டணம் தெரிவித்து இருக்கிறார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், ‘அரை நூற்றாண்டு ஆட்சியை மாறி மாறி ஆட்சி அமைத்து அடிப்படை கட்டமைப்பு கூட செய்யாமல் உள்ளதால் தான் சென்னையில் மழை காலங்களில் தத்தளிக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என கொண்டுவருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும். ஆளுநர் மாநில அரசுகளே ஆய்வு செய்வது முறையல்ல, ஆளுநர் மாநில அரசை நீதி ஆய்வு மேற்கொள்வது தவறு. 

இந்திய அரசை ஜனாதிபதி ஆய்வு மேற்கொண்டால் அனுமதிப்பார்களா?, அரசு சரியாக திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கிறது என ஆளுநர் மேற்பார்வை செய்யலாம், அண்ணா கூறியதைப் போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர்? நாமென்ன வீட்டு பாடமா எழுதித் தருகிறோம், அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு.! ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை. மிரட்டப்படுவது, அச்சுறுத்தல் படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது, நாங்கள் தான், அதிமுக, பாமகவை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது. 

நாங்கள்தான், 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர். சில இடங்களில் வேட்பாளர்களை மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இளம் வயது வேட்பாளர்களை கடத்தி இருக்கிறார்கள். சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. இது கொடுங்கோன்மை. இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம், நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம். தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல், இல்லாமல் நடைபெற வேண்டும். 

பாரதிய ஜனதாவை விட அதிக வாக்கு வங்கிகளை நாம் தமிழர் கட்சி வைத்துள்ளது. நாங்கள்தான் எதிர்கட்சி, ஆனால் 2% வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை நாங்கள்தான் எதிர்க்கட்சித என கூறி வருகிறார். நீட், ஜிஎஸ்டி, உள்ளிட்டவற்றை முதன்முதலில் கொண்டுவந்தது காங்கிரஸ் தான் அது உலகத்திற்கே தெரியும், காங்கிரஸ் கொண்டுவந்ததை பாரதிய ஜனதா தொடர்கிறது’ என்று கூறினார்.