Asianet News TamilAsianet News Tamil

இனி எல்லாம் தரமே... குவாலிட்டியும், குவாண்டிட்டியும் முக்கியம்... பொதுமக்களை குஷி படுத்தும் மு.க.ஸ்டாலின்..!

குவாண்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம் என மெனக்கெட்டு வருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
 

Now everything is quality ... Quality and quantity are important ... MK Stalin who appeases the public ..!
Author
Tamil Nadu, First Published Jul 3, 2021, 2:13 PM IST

ரேசன் கடைகளில் , தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது.Now everything is quality ... Quality and quantity are important ... MK Stalin who appeases the public ..!

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ’’ரேசன் பொருட்களின் தரத்தினை உறுதி செய்வதுடன், தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எடை குறைவு போன்ற குறைகளை நீக்கி, தங்கு தடையின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமின்றி கிடைக்க வேண்டும். சுய உதவி குழுக்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில் முனைவோருக்கு கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன்வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

ரேஷன்கடை பொருட்கள் முதல், அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கும் உடை வரை அனைத்தும் தரமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Now everything is quality ... Quality and quantity are important ... MK Stalin who appeases the public ..!

அதன் இன்னொரு புறமாக ‘’தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழக்கப்பட்டு வருகிறது. இவை மிகவும் தரமாக வழங்கப்பட வேண்டும். புதிய ரக உற்பத்திகாக வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய வேண்டும். வரும் பொங்கலுக்கு புதிய தரத்தில், சிறந்த வடிவில் வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உடைகள் இனிமேல் மிகுந்த தரத்துடன் உற்பத்தி செய்ய வேண்டும்.Now everything is quality ... Quality and quantity are important ... MK Stalin who appeases the public ..!

இதற்காக புதிய தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு முறை நூல் பதனிடும் போதும், துணிகள் உற்பத்தி செய்யப்படும் போதும் துணியின் தரம் பரிசோதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள துணிகளின் தரத்தையும் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்’ உத்தரவிட்டுள்ளார் கைத்தறி அமைச்சர் காந்தி.

ஆக, குவாண்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம் என மெனக்கெட்டு வருகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

 

Follow Us:
Download App:
  • android
  • ios