மாநாட்டின் இறுதி நாளான இன்று அக்கட்சி சார்பில் பல்வேறு தீர்மானங்களும் முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமாக ‘ ஒரு நபருக்கு ஒரு பதவி’, ‘ஒரு குடும்பம் ஒரு சீட்டு’ என்ற முக்கிய முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு குடும்பம் ஒரு சீட்டு என்ற என்ற முக்கியமான முடிவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாட்கள் சிந்தனை மாநாடு - ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள சூழலில் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டவும் அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல்களும் வர உள்ள நிலையிலும் 2024-ஆம் ஆண்டில் நாடளுமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளவும் இந்த மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்தியது. இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று அக்கட்சி சார்பில் பல்வேறு தீர்மானங்களும் முக்கியமான முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமாக ‘ ஒரு நபருக்கு ஒரு பதவி’, ‘ஒரு குடும்பம் ஒரு சீட்டு’ என்ற முக்கிய முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.


இந்த விதி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நிலையில், அந்த விதியை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. மேலும் காங்கிரஸ் கட்சியில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கமிட்டியே முடிவு செய்கிறது. இந்த கமிட்டிக்கு பதிலாக நாடாளுமன்ற வாரியம் அமைக்கும் விதி கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் இருந்து வந்தது. ஆனால், இந்தக் கோரிக்கை செயற்குழுவால் கைவிடப்பட்டது. இதன்மூலம் காங்கிரஸ் செயற்குழுவே, அக்கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாக இருக்கும்.
