Notice to IG Pon Manikkavel - Arumugamasi Commission sent
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு
அமைத்துள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் தோட்டத்தில் பணியாற்றியவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தனர்.

மேலும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் மே 25 ஆம் தேதி மீண்டும் ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சாந்தா ஷீலா நாயர், பூங்குன்றன், ராமலிங்கம் ஐஏஎஸ், ஆளுநர் மாளிகை உதவி பிரிவு அலுவலர் சீனிவாசன், ஜெ. பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், மருத்துவர் சிவக்குமார் ஆகியோரிடம் மே 26 ஆம் தேதி அன்று ஆளுமுகசாமி விசாரணை ஆணையம் குறுக்குவிசாரணை நடத்த உள்ளது.
