Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலின் மட்டும் சிக்சர் அடிக்கல.. ஒவ்வொரு அமைச்சரும் அடிப்பது சிக்சர்தான்.. இந்த அறிவிப்பை பாருங்க.

முதலமைச்சர் தங்களை சந்திக்கும் போதெல்லாம் மக்களின் குறைகளை எவ்வாறு கேட்டு தெரிந்துள்ளீர்கள் என்று தான் கேட்கிறார் எனவும், மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Not Only Chief Minister Stalin hit sixes. Every minister hits sixes. Look at this announcement.
Author
Chennai, First Published Jun 25, 2021, 6:02 PM IST

சிஎம்டிஏவை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டிட வரைபடம் இருந்தால் 60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் எனவும், கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்கும் அவசியம் உள்ளது எனவும், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தலைமையில் வீட்டு வசதி வாரிய துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறையின் செயலாளர் ஹிதேஷ் குமார் மக்வான உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். 

Not Only Chief Minister Stalin hit sixes. Every minister hits sixes. Look at this announcement.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, சி.எம்.டி.ஏ-விற்கு  தேவையான அளவிற்கு பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. காலியிடங்களை நிரப்புவதன் மூலம் சி.எம்.டி.ஏ ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என தெரிவித்தார்.சி.எம்.டி.ஏ வை அணுகும் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு கட்டிட வரைபடம் இருந்தால்,  60 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்கும் அவசியம் உள்ளது என்றும், மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது, குப்பைகளை அகற்றுவதில் தனி கவனம் செலுத்துவோம். 

Not Only Chief Minister Stalin hit sixes. Every minister hits sixes. Look at this announcement.

கோயம்பேடு காய்கறி சந்தையில் செவ்வாய்கிழமை நேரில் ஆய்வு செய்யவுள்ளோம் என அமைச்சர் முத்துசாமி கூறினார். முதலமைச்சரின் நீண்ட கால திட்டம் பற்றி  இந்த கூட்டத்தில் பேசி இருக்கிறோம் என்றும், முதலமைச்சர் தங்களை சந்திக்கும் போதெல்லாம் மக்களின் குறைகளை எவ்வாறு கேட்டு தெரிந்துள்ளீர்கள் என்று தான் கேட்கிறார் எனவும், மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு உள்ள பிரச்சனைகள் மற்றும் அதை தீர்ப்பதில் உள்ள கால தாமதம் விரைவில் சரி செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி பேசினார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios