Asianet News TamilAsianet News Tamil

8 மாதம் இல்லை; 80 வருடம் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது.. மாஸ் காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முக ஸ்டாலின், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Not 8 months; DMK will not come to power for 80 years...minister jayakumar
Author
Tamil Nadu, First Published Sep 10, 2020, 4:58 PM IST


8 மாதம் இல்லை; 80 வருடம் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முக ஸ்டாலின், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆளுங்கட்சியாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Not 8 months; DMK will not come to power for 80 years...minister jayakumar

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- 8 மாதம் இல்லை; 80 வருடம் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வராது. மீண்டும் அதிமுக ஆட்சிதான். மேலும், பேசிய அவர் தற்கொலை எதிர்ப்பு நாளான இன்று இளைஞர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முயற்சியை கைவிடாமல் உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். 

Not 8 months; DMK will not come to power for 80 years...minister jayakumar

இளைஞர்களை அதிகமாக கொண்ட இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். வேலையில்லா திண்டாட்டம் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். முன்னதாக 8 மாதங்கள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என வருவாயத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios