Asianet News TamilAsianet News Tamil

"ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்" - கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

nobel prize-for-jaya
Author
First Published Dec 29, 2016, 10:46 AM IST


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து அதிமுகவில் பொது செயலாளார் பதவிக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, பொது செயலாளராக பதவியேற்குமாறு அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், சசிகலாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

nobel prize-for-jaya

மேலும், அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அதிமுக செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை  வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமையில் துவங்கிய பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை வாசித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். 

nobel prize-for-jaya

பொதுக்குழுவில் பங்க்கேற்ற உறுப்பினர்கள்  ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பொதுக்குழுவின் மேடையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, செங்கோட்டையன், பண்ட்ருடி ராமச்சந்திரன் உள்வட 45 பேர் அமர்ந்திருந்தனர். 

nobel prize-for-jaya

கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானக்கள் நிறைவேற்றபட்டன. சசிகலாவிடம்  தலைமை பொறுப்பை ஒப்படைக்கும்  தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றபட்டுள்ளது. சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்று கொண்டனர்.சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல் கட்டு கோப்புடன் செயல்பட முடிவு செய்யபட்டுள்ளது.

nobel prize-for-jaya

இதை தொடர்ந்து சசிகலா ஜனவரி 2 ந்தேதி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா மற்றும் அமைதிக்கான நோபல் விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios