தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் பாமக அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடும் என மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக்  கூட்டணியில்தான் பாமக தொடர்வதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் பாமக அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடும் என மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் பாமக தொடர்வதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 6 மற்றும் 9 ஆகிய இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த பாமக வரும் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளது. இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்வதாகவும் உள்ளாட்சியில் மட்டும் தனித்து போட்டி என்றும் பாமக சமாதானப்படுத்தியது. 

இந்நிலையில் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலிலும் இதே முடிவை பாமக எடுத்துள்ளது, அங்கே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, என்ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலைவர்கள் மட்டும் கூட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி பாமகவிற்கு மட்டும் அழைப்பு விடுக்கவில்லை. அது பாமகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் பாமக தனித்து போட்டியிட இருந்தபோது, கூட்டணித் தலைவர்கள் வேண்டுகோளுக்கிணங்க போட்டியிடாமல், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு வழங்கினோம். தேர்தலில் கூட்டணிக்காக உழைத்தோம், ஆனால் பாமகவை அழைக்காதது முற்றிலும் சந்தர்ப்பவாதம் என்றார். 

இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தனித்து போட்டியிட தேர்தல் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி உள்ளது. போட்டியிட விரும்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம், புதுச்சேரியில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விருப்பமனுக்கள் பெற்றப் பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் பாமக அங்கம் வகித்தாலும் முறையாக அழைப்பு இல்லாததால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடும் என அவர் கூறினார். என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பாட்டாளி மக்கள் கட்சிக்கு அழைப்பு விடாமல் புறக்கணித்து இருப்பது கூட்டணிக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.