Asianet News TamilAsianet News Tamil

யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது... பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு..!

முகக்கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

No one should be forced ... Minister Anbil Mahesh orders schools .
Author
Tamilnadu, First Published Sep 17, 2021, 5:02 PM IST

முகக்கவசம் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

 No one should be forced ... Minister Anbil Mahesh orders schools .

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன். இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் 12-ஆம் வகுப்பு சான்றிதழில் அரசின் அங்கீகார சீல் இல்லாதது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அங்கீகார சீல் இல்லாததால் வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சேருவதில் சிக்கல் என தகவல் வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும்.

No one should be forced ... Minister Anbil Mahesh orders schools .

மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என எந்த தனியார் பள்ளியும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாஸ்க் அணியாமல் வரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே அதனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என தனியார் பள்ளிகளை கேட்டுக்கொள்கிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios