கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என இந்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா தெரிவித்துள்ளார் . மக்களவை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார் .  டெல்லி கலவரம் தொடர்பான விவாதம் மக்களவையில் நேற்று நடந்தது இதைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி நாட்டின் மிகச்சிறந்த காவல்துறையில் டெல்லி காவல்துறையுப் ஒன்று,   ஆனாலும் இங்கே மூன்று நாட்கள் கலவரம் நடந்தது எப்படி இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் டெல்லி காவல்துறையை இந்த விவகாரத்தில் இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன .  ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல டெல்லியில் கலவரம் நடந்து கொண்டிருந்தபோது இந்திய பிரதமர் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு  பரிவாரம்  அமெரிக்க  அதிபரை வரவேற்றுக் கொண்டிருந்தது . 

அதே நேரத்தில் இந்த கலவரத்தில் இந்துக்கள் தோற்றுவிட்டதாக சிலரும் முஸ்லீகள் தோற்றுவிட்டது சிலரும் கூறிக்கொள்கின்றனர்.  ஆனால் இதில் மனிதநேயம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது என்பதுதான் உண்மை .  கலவரம் நடந்த பின்னர்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் அங்கு சென்ற பின்னரே கலவரம் ஓய்ந்தது ஓய்ந்தது இது தொடர்பாக அஜித் தோவால் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார் .  ஆனால் அங்கு ஏன் உள்துறை அமைச்சரால் செல்ல  முடியவில்லை உள்துறை அமைச்சகத்தின் மீது  பிரதமர் அலுவலகம் நம்பிக்கை இழந்து விட்டதா கலவரத்தை ஏன் டெல்லி காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை .  இதுகுறித்து கேள்வி கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் இரவோடு இரவாக மாற்றம் செய்யப்பட்டார் .  கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் பேசினார் .  அதே நேரத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி மற்றும் திமுக எம்பி டி ஆர் பாலு உள்ளிட்டோர் அமித்ஷாவிடம் கேள்விமேல் கேள்வி கேட்டனர்.  

இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் டெல்லி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டெல்லி கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . டெல்லி கலவரம் மேலும் பரவாமல் டெல்லி போலீசார் 36 மணி நேரத்திற்குள் கலவரத்தை கட்டுபடுத்தியுள்ளனர்.  இந்த கலவரம் தொடர்பாக 2047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .  டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட யாரும் தப்பிக்க முடியாது மதம் ஜாதி கட்சி பாகுபாடின்றி அனைவரும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பாவிகள் யாரும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனது உத்தரவின் பேரில் தான் அஜித் தோவால் சம்பவ இடத்திற்கு விரைந்தார் என அமித்ஷா தெரிவித்தார் .