பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் அக்டோபர் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தீவிர சோதனைக்கு பிறகே சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அக்டோபர் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.  அக்டோபர் 1ம் தேதி முதல் வெளியூர் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் மாமல்லபுரம் செல்ல அனுமதியில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உள்ளூர்வாசிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.