திமுகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதிமுக மிகப்பெரிய இயக்கம். 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற மிகப்பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதால் எந்த கட்சி அடுத்ததாக தமிழகத்தில் ஆட்சி பிடிக்க போகிறது என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில், திருவொற்றியூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில், “திமுகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அதிமுக மிகப்பெரிய இயக்கம். அதனை யாராலும் வீழ்த்த முடியாது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக அதிமுக தான் ஆட்சியமைக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.