Asianet News TamilAsianet News Tamil

இஸ்லாமியர்களுக்கு நாடே இல்லாமல் போகும் !! குடியுரிமை திருத்த மசோதாவை கிழித்து எறிந்த ஓவைசி !!

குடியுரிமை திருத்த மசோதா  சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் அவர்களை இந்த சட்டம் நாடாற்றதாகிவிடும் என்றும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்தார்.
 

no nation for islamies
Author
Delhi, First Published Dec 9, 2019, 10:06 PM IST

இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தார்.

இந்த மசோதாவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

no nation for islamies

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி குடியுரிமை திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

no nation for islamies

தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்த மசோதா இஸ்லாமியர்களை நாடற்றதாக்கிவிடும். இந்த மசோதா மற்றொரு பிரிவினைக்குக் கொண்டு செல்லும். தென் ஆப்பிரிக்காவில் தன்னை வேறுபாட்டுடன் நடத்தினார்கள் என்பதற்காக குடியுரிமையைக் கிழித்துப் போட்டார் மகாத்மா காந்தி. 

அதேபோல நானும் இந்த மசோதாவைக் கிழித்து எறிகிறேன் என்று கூறி மசோதாவை கிழித்தெறிந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios