Asianet News TamilAsianet News Tamil

இனி மின்கட்டண உயர்வு இல்லை..!! அதிரடி மேல் அதிரடி காட்டும் அதிமுக அரசு, கரண்ட் போல உயரும் செல்வாக்கு..!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்றார். ஆனால்  மழை நின்றவுடன் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டிருந்தால் பழுது நீக்கி மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற அவர் அது ஒருபோதும் மின்தடை இல்லை என்றார். 

No more electricity tariff hike, AIADMK government showing action on top of the rising influence of the current.
Author
Chennai, First Published Oct 31, 2020, 12:20 PM IST

தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வரும். 

No more electricity tariff hike, AIADMK government showing action on top of the rising influence of the current.

பள்ளிப்பாளையத்தில் வீட்டில் திடீரென பட்டாசு வெடித்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர், அவர்களின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி மின் கட்டணம் உயர வாய்ப்பில்லை, அது ஒருபோதும் உயர்த்தப்பட மாட்டாது என ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றார்.  பொள்ளாச்சியில் விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கபட்ட பிறகே கோபுரம் அமைக்கப்படும் என்றார். 

No more electricity tariff hike, AIADMK government showing action on top of the rising influence of the current.

உடனே நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார், உரிய நிவாரணம் வழங்கிய பிறகே விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும் என்ற அவர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி இரவு நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்றார். ஆனால்  மழை நின்றவுடன் மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டிருந்தால் பழுது நீக்கி மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற அவர் அது ஒருபோதும் மின்தடை இல்லை என்றார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios