5 மாநிலங்களில் ஏற்பட்ட படுதோல்விக்கு பாஜக எம்.எல்.ஏக்கள்  மற்றும் எம்.பி.க்கள் சரியாக செயல்படாதது தான் என்றும் இதற்கு பாஜக கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  மீண்டும் தலைமை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. அதுவும் 5 மாநிலத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தபிறகு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தயக்கம் காட்டி வருகிறது. இது தற்போது நிதின் கட்கரி மூலம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இது தொடர்ப்ன டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கட்சியின்தலைவருக்கு எம்.எல்..க்களும், எம்.பி.க்களும்கட்டுப்படவில்லை என்றால் தலைவர் சரியில்லை என்றுதானே அர்த்தம் என கேள்விஎழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் , சகிப்புத்தன்மைஎன்பது மிகப்பெரியசொத்துஎன்றுதெரிவித்தநிதின் கட்கரி, இந்தியாஒருதேசமல்ல, மக்களின்தொகுப்புஎன்றும், முன்னாள்பிரதமர்நேருவைத்தனக்குப்பிடிக்கும்என்றும் கூறினார்.

அடுத்துப் பேசிய அவர், விரச்சனைகளுக்கு தீர்வுகொடுக்கமுடியாதஒருவர், குறைந்தபட்சம்பிரச்சினைகளைஉருவாக்காமல்இருக்கவேண்டும்என மோடியையும், அமிர்ஷ்வையும் தாக்கிப் பேசினார்.

மேலும், ஆட்சிகள்மாறிக்கொண்டிருந்தாலும்நாடுஅப்படியேதான்இருக்கும். இந்தநாடுஎந்தவொருகட்சிக்கோஅல்லதுதனிநபருக்கோசொந்தமானதுஅல்ல, 120 கோடிமக்களுக்குச்சொந்தமானது அமைச்சர் நிதின்கட்கரிகூறினார்.

அண்மையில்நடந்துமுடிந்தஐந்துமாநிலசட்டமன்றத்தேர்தலில்மூன்றுமாநிலங்களில்பாஜகஆட்சியைஇழந்துபடுதோல்வியைச்சந்தித்தது. கடந்த வாரம், புனேவில்நடைபெற்றநிகழ்ச்சிஒன்றில்பேசியநிதின்கட்கரி, தேர்தல்களில்தோல்வியடைந்தால்கட்சியின்தலைமைதான்அதற்குப்பொறுப்பேற்கவேண்டும்என்றுகூறியிருந்ததாகஊடகங்களில்செய்திகள்வெளியாகின. ஆனாலும் தனதுகருத்துதவறாகச்சித்திரிக்கப்பட்டுள்ளதுஎன்றுகட்கரி சமாளித்தார்.

இந்நிலையில் மோடி – அமித் ஆகிய இருவரையும் கடந்த சில நாட்களாவே டார்கெட் பண்ணி வரும் நிதின் கட்கரியை ஆர்.எஸ்.எஸ் கொம்பு சீவி விடுகிறதா ? என கூறப்படுகிறது.