No merge....No dialoge...OPS speech in thiruvercad

அதிமுகவின் இரு அணிகளும் இணையத் தேவையில்லை என பொது மக்கள் விரும்புகின்றனர் என்றும். எனவே இனி இணைப்பும் இல்லை..பேச்சு வார்த்தையும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து சசிகலா அணி ஓபிஎஸ் என செயல்பட்டு வந்தனர். இந்த இரு அணிகளும் இணைய வேண்டும் என தொண்டர்கள் விரும்பியதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஆனால் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசியதால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுக அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர் என்றும் , மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு இன்றுடன் கலைக்கப்படுவதாகவும் அதிரடியாக அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் தொடங்கப்பட்டதோ அதற்கான போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

இனிமேல் இணைப்பும் இல்லை, பேச்சுவார்த்தையும் இல்லை என கூறிய ஓபிஎஸ். தன்னுடை பழைய சகாக்கள் மனம் திருந்தி மீண்டும் இங்கு வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அப்படி வரவில்லை என்றால் எம்ஜிஆரின் ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் மன்னிக்காது அவர்களை மன்னிக்காத என தெரிவித்தார். இந்த பொதுக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.