எவ்வளவு சொல்லியும் புத்தி வரல.. 4106 பேர் மீது கேஸ் போட்டு, 2582 வாகனங்களை பறித்த போலீஸ்..
மேலும் சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர், நேற்று 28-5-2021 மேற்கொண்ட வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் தொடர்ந்து தடையை மீறியது தொடர்பாக 1,442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,889 இருசக்கர வாகனங்கள், 70 ஆட்டோக்கள், 25 இலகுரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் என மொத்தம் 1988 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளில்லா முழு ஊரடங்கு காலத்தில் நேற்று கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 4106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,582 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் முக கவசம் அணியாத 2672 நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத 253 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநாகர காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு: அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட ஐந்து கடைகள் மூடப்பட்டு ரூபாய் 1,76,300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசால் 10-5-2021 முதல் 24-5-2021 காலை வரையில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக 24- 5-2021 காலை முதல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்களின் உத்தரவின் பேரில் 24-5-2011 காலை முதல் முறையாக முழு ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில் சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில், 13 எல்லை வாகன தணிக்கை தடைகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகளாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகன தணிக்கை சாவடிகள் அமைத்து கண்காணித்து மிக அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் செல்ல பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டு, இ-பதிவு வைத்திராத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர், நேற்று 28-5-2021 மேற்கொண்ட சோதனையில் கொரோனா ஊரடங்கு தடையை மீறி அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றது தொடர்பாக, 2,664 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 558 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள்,7 இலகுரக வாகனங்கள். மற்றும் இதர வாகனம் என மொத்தம் 594 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சட்டம் ஒழுங்கு காவல் குழுவினர், நேற்று 28-5-2021 மேற்கொண்ட வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு சோதனையில், சென்னை பெருநகரில் தொடர்ந்து தடையை மீறியது தொடர்பாக 1,442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றியது தொடர்பாக 1,889 இருசக்கர வாகனங்கள், 70 ஆட்டோக்கள், 25 இலகுரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் என மொத்தம் 1988 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முகக் கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக, 2622 வாழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது தொடர்பாக 253 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்ட 5 கடைகள் மூடப்பட்டு, இதுவரை 1,76,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து, கொரோனா தொற்றை தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.