ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நேற்று இரவு சிதம்பரம் வீட்டுக்குள் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ப.சிதம்பரம் வழக்கு விவகாரம், பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 


குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது போலி என்கவுண்ட்டர் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து திஹார் சிறையில் அடைத்தார். 

அதற்கு பழி வாங்கவே தற்போது அமித் ஷா தூண்டுதலின் பேரில் சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன்  பேசும்போது, அவர் தவறு செய்திருந்தால், அதற்கான விளைவுகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கூறினார்.

மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் விசாரணை அமைப்புகள் (சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம்) செயல்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள் என அதிரடியாக தெரிவித்தார்.