எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி பெற வைக்கும் முறையில், மத்திய அரசு மாற்றம் கொண்டு வராது என தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் 64-வது கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாபா. பாண்டியராஜன், புதிய கல்வி கொள்கை மற்றும் கட்டாய தேர்ச்சி ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி பெற வைக்கும் முறையில், மாற்றம் கொண்டு வருவதற்கு அனைத்து மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்ததாக குறிப்பிட்ட அவர், கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரும் திட்டத்தை, மத்திய அரசு கைவிட்டுள்ளதாக, மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
