Asianet News TamilAsianet News Tamil

நித்யானந்தாவே கைவிரித்து விட்டார்... அய்யகோ இந்தியாவின் நிலைமை இனி என்னவாகுமோ..?

அனைத்துக்கும் தீர்வு சொல்லும் நித்யானந்தா, இப்போது இந்தியர்கள், கைலாசாவுக்கு வரக்கூடாது என அறிவித்து இருப்பது வேதனையின் உச்சம் என அவரது பக்தர்கள் புலம்பித் தீர்க்கின்றனர். 

Nityananda has given up ... Ayyago What is the situation in India now ..?
Author
Kailasagiri, First Published Apr 21, 2021, 3:12 PM IST

விருப்பமுள்ளவர்கள் வாருங்கள். அனுமதி இலவசம் என புதிதாக கைலாசா நாட்டை உருவாக்கி, அங்கே பல்கலை, தனி ரூபாய் நோட்டுக்கள், பாஸ்போர்ட் என எல்லாம் அறிவித்த நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து கிளம்பிய கைலாசா அதிபர், தமிழகத்தில் இருந்து உருவான ஆன்மீக ஆற்றல், எல்லோருக்கும் நன்மை செய்வேன் எனக்கூறிய பீற்றல், ரஞ்சிதாவின் ரசிகர் இப்போது கைவிரித்துள்ளார். Nityananda has given up ... Ayyago What is the situation in India now ..?

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தப்பியோடி தனித்தீவு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியதாகவும் கைலாசாவை தனி நாடாகவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தி வருகிறார்.Nityananda has given up ... Ayyago What is the situation in India now ..?

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நித்யானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில், ’’கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 

அனைத்துக்கும் தீர்வு சொல்லும் நித்யானந்தா, இப்போது இந்தியர்கள், கைலாசாவுக்கு வரக்கூடாது என அறிவித்து இருப்பது வேதனையின் உச்சம் என அவரது பக்தர்கள் புலம்பித் தீர்க்கின்றனர். ஏற்கெனவே, கைலாசாவில் யாருக்கும் கொரோனா இல்லை என்று அறிவித்து இருந்தார் நித்யானந்தா. 

 

 கடந்த மார்ச் மாதம், நடிகையும் மாடலுமான மீடா மிதுன்,  ‘’தனக்கு நித்யானந்தாவிடம் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன் என கூறி இருந்தார். அவரிடம் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அவரிடம் இருந்து எனக்கு கைலாசா வருவதற்கு அழைப்பு வந்தால் உடனே அவரிடம் சென்றுவிடுவேன் என கூறி இருந்தார். நித்யானந்தா எழுதிய லிவிங் என்லைட்மெண்ட் என்ற புத்தகத்தைக் காட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகியது.

Nityananda has given up ... Ayyago What is the situation in India now ..?

அதில் மீரா மிதுன் “நான் இந்த அற்புதமான புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த மாதிரி புத்தகங்களை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது நமக்கு உண்மையிலேயே தெரிய விஷயஙக்ளைப் பற்றி அதிகமான அறிவைத் தருகிறது. இந்த புத்தகம் உங்களுடன் பேசுகிறது. அதிக ஞானத்தை தருகிறது. படிப்பதற்கு சுவாரசியமான ஒரு புத்தகம். இது உண்மையிலேயே அற்புதமானது. நான் இதை நேசிக்கிறேன். இந்த லிவிங் என்லைட்மெண்ட் புத்தகம் எழுதியது பரமஹம்ச நிதியானந்தா. நான் இந்த மாதிரி புத்தகத்தை நாம் படிக்க வேண்டும். உண்மையில் இந்த புத்தகத்தை எங்களுக்கு, கடவுளின் தூதர், சாமியார் நித்யானந்தா அனுப்பினார். நான் இந்த புத்தகத்தை எல்லோருக்கும் பரிந்துரைக்கிறேன்.” என்று கூறி இருந்தார். இப்போது அந்த மீரா மிதுனுக்காவது கைலாசாவில் அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

 

Follow Us:
Download App:
  • android
  • ios