Asianet News TamilAsianet News Tamil

‘அரசியல் கட்சி தொடங்கினார் நித்தியானந்தா! ரஞ்சிதாவுக்கு என்ன பதவி தெரியுமா? கட்சி பெயர் என்ன?

nityananda created political party
nityananda created political party
Author
First Published Apr 29, 2018, 4:42 PM IST


பிரமச்சாரி என சொல்லிக்கொண்டு தனக்கென ஒரு ஆன்மீக பக்தர்கள் கூட்டத்தை கட்டிகொண்டு சாமியாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நித்தியானந்தா கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், கட்டிலில் சல்லாபத்தில் ஈடுப்பட்ட ரகசிய வீடியோ வெளியாகி  பெரும் பரபரப்பானது.

nityananda created political party

நித்தியின் இந்த செயலால் தமிழகத்தில் நித்தியானந்தாவின் ஆஸ்ரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த வீடியோ பொய் என நித்தியானந்தா சொன்னார். அந்த வீடியோவை ரகசிய கேமரா வழியாக நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின்கருப்பன் எடுத்தார் என தெரியவர அவர் மீது காவல்துறையில் புகார் சொன்னது நித்தியானந்தா தரப்பு.  இதனையடுத்து நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர் ஆர்த்தியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என புகார் அளித்ததை அடுத்து  நித்தி மீது பல அடுக்கடுக்கான புகார்கள் அவரது சிஷ்யர்களே சுமத்தினர்.

nityananda created political party

இதனையடுத்து புகார், வழக்கு, நீதிமன்றம் என அலைந்த நித்தியானந்தா, மதுரை ஆதினமாக முயன்றார். ஆனால் அது பல்வேறு சிக்கலை உருவாக்கி விட்டது.  

இவைகளை பார்த்து கோபமான நித்தியானந்தா, திருவண்ணாமலையில் தனக்கென நிரந்தரமாக ஆதரவாளர்கள் வட்டாரத்தை உருவாக்க செய்தார். திருவண்ணாமலையில் தற்போது பிரபலமாகவுள்ள சில தன்னார்வ இயக்கங்களுக்கு திமுக பிரமுகர் ஒருவர் மூலமாக நிதியுதவி தருகிறார். அந்த இளைஞர்களும் மறைமுகமாக நித்தியானந்தாவை ஆதரிக்கிறார்கள் என்கிற கருத்து உலாவருகிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு வைரமுத்து மற்றும் கலைஞர், கனிமொழி  என இது மதத்திற்கு எதிராக இருப்பவர்களை கொச்சையான முறையில் விமர்சித்து சிறுமிகளை வைத்து வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டனர் நித்தியானந்தா சிஷ்யர்கள். சிறுமிகள் செய்த இந்த சிறுபிள்ளை தனமான வேலைகள் எடுபடாமலே போனது.

nityananda created political party

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத நித்தி தனக்கென ஒரு அரசியல் அமைப்பு உருவாக்க  விரும்பினார்.  . திருவண்ணாமலையை சேர்ந்த சில இளைஞர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலமாக நித்தியானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர் போடும் பணியை செய்தத் தொடங்கினார்.

nityananda created political party

தற்போது அந்தக் டீமை வைத்து, “நித்தியானந்தா அரசியல் சேனை” ஆன்மீக அரசியல் அமைப்பை துவங்கியுள்ளார். “புரட்சி செய்வோம், புதிய சரித்திரம் படைப்போம், இளைஞர்களே இணைவீர்” என உறுப்பினர் சேர்க்கைக்காக போஸ்டர் அடித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

nityananda created political party

இந்த அமைப்பின் மாநில தலைவராக சிவா என்பவரும், மாநில பொது செயலாளராக செந்தில், மாநில துணை பொதுச்செயலாளராக ஆரணிபிரபு என போஸ்டரில் படம் போட்டுள்ளனர். இந்த அமைப்புக்கு முழுக்க முழுக்க நிதியுதவி செய்வது நித்தியானந்தா அறக்கட்டளை தான். தன்னை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு இனி இந்த அமைப்பின் மூலமாக பதிலடி கொடுக்க த்தான் இந்த புதிய கட்சியாம். அதோடு, உள்ளாட்சி மன்றம் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் உள் விவகாரத்தை அறிந்தவர்கள். இதற்காக தமிழகம் முழுவதும் ஆட்களை திரட்ட சொல்லியுள்ளாராம். வரும் நாடாளமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தனது சேனையை களத்தில் இறக்கவுள்ளாராம்.

இந்த நித்தியானந்தா அரசியல் சேனையில் நடிகை ரஞ்சிதாவுக்கு முக்கியப் பதவிகள் வகிக்க இருக்கிறாராம். அநேகமாக பொதுசெயலாளர் பதவியை வாங்குவதில் குறியாக உள்ளாராம். ஆனால் மகளீர் அணி செயலாளராக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios