Asianet News TamilAsianet News Tamil

மதுரைக்கு போங்க வாங்க… ஆனா இதெல்லாம் செய்யவே கூடாது- அனுமதி கொடுத்த ஐகோர்ட் மதுரை கிளை

nithiyanantha allowed in madurai aathinam
nithiyanantha allowed in madurai aathinam
Author
First Published May 30, 2018, 11:25 AM IST


நித்தியானந்தா மதுரை ஆதினத்தின் இளைய மாடாதிபதியாக முடி சூட்டப்பெற்றார். பின் அவர் நடிகை ரஞ்சிதாவுட்ன் இருக்கும் வீடியோ ஒன்று செய்தி தொலைக்காட்சி சேனலில் வெளியானது. இது மக்கள் மத்தியிலும் இந்து மத பக்தர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை ஆதினம் புனிதமானது என்றும் அங்கு நித்தியானந்தா வரக்கூடாதென ஜெகதல பிரதாபன் என்பவர் வழக்கு தொடுத்தார். அதனை விசாரித்த தனி நீதிமன்றம் நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்குள் நுழையக்கூடாது என  நீதிபதி மகாதேவன் தடை விதித்திருந்தார். இளைய மாடாதிபதி என்று அழைத்துக்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

nithiyanantha allowed in madurai aathinam

இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் ராஜசேகர் என்பவர் மேல்முறையீடு மனு கொடுத்திருந்தார். அதனை உயர்நீதி மன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை விசாரித்து இடைக்காலமாக அனுமதி வழங்கியுள்ளது

நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்கு செல்ல நித்தியானந்தாவுக்கு தடையில்லை என்றும் அவரும் ஒரு பக்தாராக செல்லாம் ஒரு போதும் இளைய ஆதினம் என்கிற அடிப்படையிலோ அல்லது அப்படி குறிப்பிட்டோ செல்லக்கூடாதென நீதிமன்றம் கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios