Nirmaladevi whats app chat with 4 college students leaked now

பாலியல் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று தமது மாணவிகளைக் கட்டாயப்படுத்தும் குரல் பதிவு வெளியான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி தற்போது சிறையில் கம்பிஎன்னிக்கொண்டு இருக்கிறார்.

பெரிய மனிதர்களின் கட்டிலுக்கு பாலியல் ரீதியாக உடன்பட மாணவிகளை போன் போட்டு உரையாடிய உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியை காவல் துறையின் விசாரணையில், அவர் மாணவிகளோடு போனில் மட்டுமல்லாது வாட்ஸ்அப்பிலும் எழுத்துபூர்வமாக நடத்திய உரையாடல்கள் சிக்கியுள்ளன. போலீசாரிடம் சிக்கிய அந்த அதிரவைக்கும் அந்த ஆதாரங்களை முன்னணி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டது.

நிர்மலா தேவியின் தவறான நோக்கதில் தான் இப்படி பேசியிருக்கிறார். அவர் அனுப்பிய மெசேஜ் அனைத்தும் புரோக்கராக மாறி பெரிய மனிதர்களுக்கு மாணவிகளை பாலியல் ரீதியாக கட்டிலுக்கு அனுப்ப முயற்சித்தது உறுதியானது.

மாணவிகளிடம் நிர்மலா தேவி நடத்திய வாட்ஸ்அப் உரையாடல்கள் ஸ்க்ரீன் ஷாட்களாக போலீஸார் கையில் சிக்கியிருக்கின்றன. அநேகமாக இவற்றை நிர்மலா தேவியின் போனில் இருந்து போலீஸார் கைப்பற்றியிருக்க வாய்ப்புள்ளது. அப்படி இல்லையென்றால் நிர்மலா தேவியார் என்று வெளிச்சத்திற்கு வந்த பின் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவிகளே இந்த ஆதாரங்களைக் காவல்துறையினரிடம் கொடுத்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குத் தான் புத்தாக்கப் பயிற்சிக்காக செல்வதாகக் கூறும் நிர்மலா தேவி, ‘கண்ணுங்களா டீம் ஃபார்ம் பண்ணுவோமா? மேடம் வெளியே போகும்போது கூட வர்றீங்களா? அமைதியா சாதிப்போமா?’ என்று மாணவிகளுக்கு வாட்ஸ்அப் அனுப்பியிருக்கிறார்.

மாணவிகளும் மேடம் ஏதோ புதுசா நமக்கு சொல்கிறார்கள் என கேட்டுள்ள போது, ‘வெற்றிக்குத் திறமை மட்டுமே போதாது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்’ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் நிர்மலா தேவி, அதுமட்டுமல்லாமல் மாணவிகளிடம், ‘உங்க அழகான போட்டோக்களை டிபியாக வையுங்க’ அதிர்ஷ்டம் எப்போதாவது தான் கதவை தட்டும். என்றும் அப்போது பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்ற வாய்ப்புகள் மாணவியாக இருந்தபோது எனக்கும் வந்தது, ஆனால், நான் நிராகரித்துவிட்டேன். ஆனால், நாம் அதை செய்யவில்லை என்றால் வேறு யாராவது அதை செய்வார்கள்.

இப்படியே போய்கொண்டிருக்கும் இந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் ஒருகட்டத்தில், ‘என் மெசேஜில் உங்களுக்கு விருப்பம் என்றால், தினமும் குட் மார்னிங் சொல்லுங்க, குட் ஈவினிங் சொல்லுங்க மெசேஜ்களை கேபிட்டல் லெட்டரில் அனுப்புங்கள்’ என்றும், ‘தான் சொல்வதை ஏற்றுக்கொண்டால் மிகப் பெரிய செல்வாக்கு பெறுவீர்கள்’ என்றும் சொல்கிறார்.சில மாணவிகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பல மாணவிகள் நிர்மலாதேவியை கண்டபடி திட்டியே பதில் மெசேஜ் போட்டுள்ளார்கள்.

மேலும் ஒரு பெண் , ‘மேடம்... இந்த மாதிரியான மெசேஜை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கலை. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு இல்ல. நீங்கள் சொல்வதை கேட்கும்போதே உடம்பு கூசுது. என்கிட்ட பேசியதைப்போல, வேறு யார்கிட்டயும் பேசிடாதிங்க. இதே மாதிரி வேறு யார்க்கிட்டயாவது கேட்டிருந்தா நடக்குறதே வேற. நாங்க உங்க பதவிக்கும் வயசுக்கும் மரியாதை கொடுத்துதான் அமைதியா இருக்கேன்’ என்று என திட்டியிருக்கிறார் அந்த மாணவி.

அதோடு மட்டுமல்லாமல், என்னையும் பலமுறை பரிசோதித்தார்கள். நான் ரகசியத்தை கசியவிடாமல் இருந்ததால் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டார்கள். அதற்குப் பிறகே இந்த வாய்ப்பு வந்துள்ளது. அதனால்தான் உங்களிடம் பேசிவருகிறேன். உங்களது நல்ல எதிர்காலத்திற்காகத்தான் நான் இதைச்செய்கிறேன் என மாணவிகளிடம் வாட்ஸ் ஆப்பிள் சாட் செய்துள்ளார்.

இப்படியாக மாணவிகளை நிர்மலா தேவி வாட்ஸ்அப்பில் துரத்துவதும், அதற்கு மாணவிகள் மறுப்பதும் இப்போது வெளியாகியுள்ள அடுத்த கட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் லிஸ்ட்டில் வேறு விவிஐபிக்கள் யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரித்து வருகிறது போலீஸ்.