Asianet News TamilAsianet News Tamil

குறைந்த சீட்டுகளைப் பெற்று மத்தியில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் தெரியுமா? கருத்துக் கணிப்பில் புதிய தகவல் !!

2019 மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும் பட்சத்தில் பாஜக தோற்பது உறுதி என்றும் அதே நேரத்தில் எதிர்கட்சிகள் தனித்னியாக நின்றால் குறைந்த சீட்டுகளைப் பெற்று பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் நேஷன்நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Next yeat Parliment election  BJP Vs congress
Author
Chennai, First Published Aug 22, 2018, 8:39 AM IST

தற்போது தேர்தல் நடந்தால் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தொடர்பாக இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் மூட் ஆப் நேஷன்’  இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது.

 

அதில் எதிர்க்கட்சிகள் அதிகபட்சமாக 64 சதவிகிதம் வாக்குகளை பெறும் நிலையில், பாஜக-வுக்கு வெறும் 36 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

Next yeat Parliment election  BJP Vs congress

 

தற்போதுள்ள சூழலில்- தேர்தல் நடைபெற்றால் பாஜக கூட்டணிக் கட்சிகள் 36 சதவிகித வாக்குகளுடன் மொத்தமாக 281 இடங்கள் வரை பெறலாம். அதாவது 2014 தேர்தலின் போது பாஜக-வுடன் இருந்த கூட்டணி கட்சிகள் அப்படியே தொடரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை கிடைக்கும். இதற்கு, சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளும் இருக்க வேண்டும்.

Next yeat Parliment election  BJP Vs congress

அதேபோல 2014 தேர்தலில் இருந்த கூட்டணியோடு காங்கிரஸ் கட்சி தற்போது போட்டியிட்டால், அந்த கூட்டணி 31 சதவிகித வாக்குகளுடன் 122 இடங்களைப் பிடிக்கும்.

மற்ற கட்சிகள் 33 சதவிகித வாக்குகளுடன் 140 இடங்களைப் பெறும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது..

Next yeat Parliment election  BJP Vs congress

மாறாக, எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்தித்தால், பாஜக கூட்டணிக்கு 281 இடங்கள் என்பது கனவாகவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. . குறிப்பாக காங்கிரஸ் தனது கூட்டணியை விரிவுபடுத்தி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து நின்றாலே 41 சதவிகித வாக்குகளை அள்ளிவிட முடியும் என்று இந்தியா டுடே கூறுகிறது.

Next yeat Parliment election  BJP Vs congress

 

அந்தச் சூழலில் பாஜக-வுக்கு 36 சதவிகித வாக்குகளும், மற்றவர்களுக்கு 23 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் என்பது இந்தியா டுடே கூறுவதால், பாஜக தோல்வி அடைந்து விடும் என்றே தெரிகிறது.

 

ஒருவேளை எதிர்க்கட்சிகள் ஒன்றிணையா விட்டால் குறைந்த வாக்குகளைப் பெற்று பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த இடங்களைப் பெறுவதற்கும் சிவசேனா, தெலுங்குதேசம் போன்ற கட்சிகள் வேண்டும் எனும்போது, நிச்சயமாக 200 இடங்களைக் கூட பாஜக கூட்டணி பெறாது என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios