மக்களவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு முடிவடைவதால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்டத்தில் உருக்கமாக பேசி ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த முதல்வரை பற்றி பேசியிருக்கிறார் அவர். 

முதல்வர் எடப்படி பழனிச்சாமி ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ’’விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. நான் விவசாயிகளுக்காக பணியாற்றுகிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு அவர்களின் கஷ்டம் புரியும். இப்போது ஒரு விவசாயிதான் உங்களுக்கு முதல்வராக இருக்கிறார். நாளை நான் முதல்வராக இல்லையென்றாலும் இன்னொரு விவசாயிதான் முதல்வராக வருவார். இனி தமிழகத்தை எப்போதும் ஆளப்போவது விவசாயிதான்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

’’நான் முதல்வராக இல்லாவிட்டால் எனக்கு பதில் இன்னொரு விவசாயி முதல்வர் ஆவார்’’ என எடப்பாடி பேசுவது இதுதான் முதல்முறை. தனக்கடுத்து இன்னொரு விவசாயிதான் முதல்வர் என்கிறாரே..? யாரந்த விவசாயி? ஓ.பன்னீர்செல்வமா? அல்லது கட்சியில் உள்ள மற்றவர்களா? என நாலாபுறமும் கேள்விகள் எழத் தொடங்கி இருக்கிறது. காரணம் நடைபெற உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடி ஆட்சி நீடிக்குமா? என்பதை தீர்மானிக்கக்கூடியது. 

ஆக, இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக அதிமுக ஆட்சியிலும், பாதகமாக அமைந்தால் அரசியலிலும் பெரும் மாற்றங்கள் நிகழும்.  சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியை காப்பாற்ற 8 இடங்களில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக மாறும் பட்சத்தில் இடங்களில் வென்றால் போதும். ஒருவேளை இந்த தொகுதிகளில் வெல்ல முடியாவிட்டால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போதும் அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஓபிஎஸ் வழிவிட்டு வேறொருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை டி.டி.வி.தினகரனின் ஆதரவுடன் இந்த ஆட்சி தொடர வாய்ப்புள்ளது.

 

ஆக, அதிமுக ஆட்சி தொடரும். தனது பதவியை விட்டுக் கொடுத்தாகவது மற்றொருவரை முதல்வராக்கி விடுவேன். ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகி விடமுடியாது என சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி’’ என்கிறார்கள் அவரது செயல்பாட்டை அறிந்தவர்கள்.