Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் அடுத்தது பாஜக கூட்டணி ஆட்சி... தெறிக்க விடும் கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக - அதிமுக அடங்கிய கூட்டணி வெற்றி பெறும் என்று புதிய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Next bjp alliance government in puducherry... new pre poll survey says..
Author
Delhi, First Published Mar 24, 2021, 10:24 PM IST

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் டைம்ஸ் நவ்-சி வோட்டர் இணைந்து 1265 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.Next bjp alliance government in puducherry... new pre poll survey says..
இதன்படி புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக அடங்கிய என்.டி.ஏ. கூட்டணி 19 முதல் 23 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி 7 - 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி 39.5 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ. 47.2 சதவீத வாக்குகளைப் பெறுய்ம் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. Next bjp alliance government in puducherry... new pre poll survey says..
முதல்வர் பதவிக்கு நாராயணசாமி சரியானவர் என்று 20 சதவீதம் பேரும் என்.ரங்கசாமி என 49.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios