அவர் அளித்த பதிலில் கூறிதாவது காங்கிரஸ், என்சிபி கட்சிகளுடன் மாநிலத்தின் நலன், மக்களின் நலன் ஆகியவற்றை முன்வைத்து குறைந்தபட்ச செயல் திட்டம் தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.ஒரு கட்சி ஆளும் அரசானாலும் அல்லது கூட்டணி ஆட்சியானாலும் சரி நிர்வாகத் திட்டம் என்பது மிகவும் அவசியம். 
நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸின் தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்காவும், மகாராஷ்டிரா மேம்பாட்டுக்காகவும் உழைத்துள்ளார்கள்.


மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவின் ஆட்சிதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். யார் தடுத்தாலும், தடுக்க முயற்சித்தாலும் மாநிலத்தின் முதல்வர் சிவசேனாவில் இருந்துதான் வருவார். 

மகாராஷ்டிர மாநிலத்துடனான எங்களின் தொடர்பு தற்காலிகமானது அல்ல. 50 ஆண்டுகளுக்கும் மேலானது.ஆட்சி அதிகாரத்தைப் பகிர்வது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்களால் முடிவு எடுக்க முடியும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை, நிலைப்பாடு இருக்கிறது. 

இதற்கு முன் பாஜகவில் இருந்த மூத்த தலைவர் வாஜ்பாய் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைவராக இருந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்துதான் ஆட்சி நடத்தினார். மகாராஷ்டிராவில் சரத்பவார், முற்போக்கு ஜனநாயக முன்னணி என்று ஆட்சி அமைத்தார். கொள்கைகள், சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருந்த கட்சிகள் இதற்கு முன் ஒரே தளத்தில் பயணித்துள்ளன என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.