அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 20 நாட்களில் கவிழும் என புகழேந்தி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் பேட்டியளித்த அவர் ஊழல் செய்த அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றார்.
அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 20 நாட்களில் கவிழும் என புகழேந்தி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் பேட்டியளித்த அவர் ஊழல் செய்த அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றார். 
தமிழக முதல்வர் எடப்பாடி அணியினருக்கும், துணை முதல்வர் ஓபிஎஸ் அணியினருக்கும் கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தின் முதல்வராக வருவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்து வருகிறார் என புகழேந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் இரண்டரை ஆண்டு ஆட்சியாக சரிபாதியாக பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆட்சி காலம் முடிந்தும், அவர் பதவி விலகாததால் ஓ.பி.எஸ். தரப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் இன்னும் 20 நாட்களில் ஆட்சி கவிழும். மேலும் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பிறகு தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்கள் 70 பேரும், அமைச்சர்கள் 10 பேரும் அமமுகவுக்கு வருவதற்கு தயாராக உள்ளனர் என்ற பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும் என்றார். தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. ஊழல் செய்த அமைச்சர்கள் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.
