என்னதான் கருணாநிதி மிக ஆளுமையான அரசியல் சக்தியாக இருந்தாலும் கூட, உட்கட்சிக்குள் அவருக்கு எதிரான சில தலைகள் இருக்கத்தான் செய்தார்கள். கருணாநிதியின் சாணக்கியத்தனமான அரசியலை எதிர்த்து சத்ரியத்தனமாக குரல் கொடுத்த நபர்கள் அவர்கள். கருணாநிதியால் இவர்களை ஓரங்கட்ட முடியவில்லை. காரணம், அந்தந்த மண்டலங்களில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்தால்தான் கட்சி உறுதியாக இருக்கும்! என்பதால்.
என்னதான் கருணாநிதி மிக ஆளுமையான அரசியல் சக்தியாக இருந்தாலும் கூட, உட்கட்சிக்குள் அவருக்கு எதிரான சில தலைகள் இருக்கத்தான் செய்தார்கள். கருணாநிதியின் சாணக்கியத்தனமான அரசியலை எதிர்த்து சத்ரியத்தனமாக குரல் கொடுத்த நபர்கள் அவர்கள். கருணாநிதியால் இவர்களை ஓரங்கட்ட முடியவில்லை. காரணம், அந்தந்த மண்டலங்களில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்தால்தான் கட்சி உறுதியாக இருக்கும்! என்பதால். எனவே பல்லைக் கடித்துக் கொண்டும், அவர்களை அணுசரித்துக் கொண்டும் கட்சியை நடத்தினார்.

கருணாநிதிக்கு அடிக்கடி செக் வைத்தபடி, உட்கட்சி அரசியலில் தெறிக்கவிட்ட நிர்வாகி என்றால் அது சேலம் வீரபாண்டி ஆறுமுகம்தான். அந்த மாவட்டத்தில் கட்சியை கோட்டையாக வைத்திருந்த மனிதர். கருணாநிதியை தைரியமாக எதிர்த்து கேள்விகளும் கேட்கும் துணிச்சலுடையவர். இவரது பின்னால் லட்சக்கணக்கில் தொண்டர்கள் இருந்ததால் கருணாநிதியாலும் இவரை கட்சியில் கட்டம் கட்ட முடியவில்லை. மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தினை பற்றிய ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்- வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்’ எனும் புத்தகத்தை கடந்த வாரத்தில் சேலத்தில் ஸ்டாலின் வெளியிட்டார். அந்தப் புத்தகம் முன்பே வீரபாண்டியாரால் எழுதப்பட்ட நூல்! என்றும், அது வெளியாவதற்கு முன்பே அவர் மறைந்துவிட்டார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த நூல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது!என்கிறார்கள்.


தம்பி ஸ்டாலினோடு பிரச்னை ஏற்பட்டபோது வீரபாண்டியாரை அழகிரி நாடினார். பொது எதிரி ஸ்டாலினுக்கு எதிராக இருவரும் கைகோர்த்தனர். இதில் கருணாநிதிக்கு நிறைய கோபம். ‘என்னய்யா என் பசங்களை விறகாக்கி, எரியவிட்டு நீ குளிர் காயிறியா?’ என்று கடித்திருக்கிறார். இந்த யுத்த விஷயங்களெல்லாம் இந்த புத்தகத்தில் இல்லவே இல்லை. நிறைய உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. வீரபாண்டியார் எழுதிய வரலாறு வேறு. இவங்க இப்போ ஸ்டாலின் மகிழும் படி வரலாறை மாத்தி எழுதியிருக்காங்க.” என்கிறார்கள்.
ஏற்கனவே கட்சியை பற்றி ஆயிரம் பஞ்சாயத்துகள் இருக்குற நேரத்துல, கசப்பான உண்மைகளை எழுதிட அனுமதித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற ஸ்டாலின் விரும்புவாரா என்ன? என்பதே விமர்சகர்களின் கேள்வி.
